சொதப்பிய பந்த்.. காப்பாற்றிய கோஹ்லி: தென் ஆப்பரிக்காவை ஊதி தள்ளிய இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்

மொஹாலியில் நடைபெற்ற தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

தர்மசாலாவில் நடைபெறவிருந்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது டி-20 போட்டி பஞ்சாப், ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியல் வென்ற இந்தியா பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அணித்தலைவர் குயிண்டன் டி காக் 52 ஓட்டங்களும், டெம்பா பவுமான 49 ஓட்டங்களும் எடுத்தனர். பந்து வீச்சில் தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Twitter

150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் வெளியேறினார். இதனையடுத்த தவானுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி பொறுப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார்.

Twitter

இதனிடையே தவான் 40 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ஓட்டங்களிலே பெவலியன் திரும்பினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி இந்திய அணித்தலைவர் கோஹ்லி 52 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Twitter
.

19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா அணி தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. கோஹ்லி ஆட்ட நாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

Twitter

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்