இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி.. இலங்கையில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய ஜூனியர் இந்திய அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், வங்கதேசத்தை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

U19 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.

இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இறுதிப்போட்டியில் நேற்று மோதின. கொழும்பில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கரண் லால் 37 ஓட்டங்களும், துருவ் 33 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச தரப்பில் மிருதுன்ஜோய், ஷமிம் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய வங்கதேச அணி 33 ஓவர்களுக்கு 101 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதர்வா 5 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், ஜூனியர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி இந்திய அணி சாம்பியன் ஆனது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்