மிட்செல் மார்ஷின் புயல்வேகத்தில் சரிந்த இங்கிலாந்து.. தனியாளாய் போராடும் பட்லர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் கடைசி டெஸ்டின் முதல்நாள் ஆட்டத்தில், அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டென்லியை 14 ஓட்டங்களில் கம்மின்ஸ் வெளியேற்றினர்.

பின்னர் பர்ன்ஸ்-ரூட் ஜோடி சிறப்பாக விளையாடியதால் அவுஸ்திரேலிய 100 ஓட்டங்களை கடந்தது. இந்நிலையில் 47 ஓட்டங்களில் இருந்த பர்ன்ஸ் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ஸ்டோக்ஸ் (20) மிட்செல் மார்ஷின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அணித்தலைவர் ஜோ ரூட் அரைசதம் அடித்தார்.

ஆனால் அவரும் 57 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களை மிட்செல் மார்ஷ் தனது புயல்வேகப்பந்து வீச்சின் மூலம் பெவலியனுக்கு அனுப்பினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்கள் எடுத்தது.

Reuters/Paul Childs

Reuters

நங்கூரம் போல் நின்ற ஜோஸ் பட்லர் 84 பந்துகளில் 64 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Reuters Photo

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்