மர்ம உறுப்பில் மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. துடியாய் துடித்த வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வீசிய பந்து, இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டை தாக்கியதால் வலியால் துடித்தார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார் மின்னல் வேகத்தில் வீசிய பந்து, ரூட்டின் பாக்ஸில் (கிரிக்கெட் கார்ட்) பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.

140 கிலோ மீற்றர் வேகத்தில் வந்த அந்த பந்து, edge ஆகி ஜோ ரூட்டின் மர்ம உறுப்பில் தாக்கியதில், அவர் அணிந்திருந்த safety gaurd உடைந்து போனது.

நிலைகுலைந்த ரூட் கீழே விழுந்து, தலையை தரையோடு வைத்துக் கொண்டு மூச்சு விட முயன்றார். சில நிமிடங்கள் வரை அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.

பதற்றம் ஓரளவு தணிந்த நிலையில், எழுந்த அவர் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, புது safety gaurd அணிந்து ஆடினார். இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. தொடர்ந்து ஆடிய ஜோ ரூட் 71 ஓட்டங்கள் எடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்