இனிமே தான் ஆட்டத்தையே பார்க்க போறீங்க... அவுஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மிரட்டி வரும் நிலையில், இனிமேல் தான் ஆர்ச்சரின் ஆட்டமே இருக்கு என்ற வகையில், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் போட்டியிலே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும், அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்களை தன்னுடைய துல்லியமான பவுன்சர் மூலம் மிரட்டி வருகிறார்.

குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவர் வீசிய பவுன்சர் பந்து, தலையில் பலமாக அடித்ததால், ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சரின் பந்துவீச்சிலும், பவுன்சரிலும் அவுஸ்திரேலியா வீரர்கள் பார்த்தது ஒரு பகுதிதான்.

இன்னும் ஆக்ரோஷமாக, ஆவேசமாக பவுன்சர்களை அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. யாரும் களத்தில் நிலைத்து நின்று ஆட முடியாது.

எங்களின் பந்துவீச்சு தாக்குதலில் மற்றொரு பரிமாணத்தை ஆர்ச்சர் வெளிப் படுத்துகிறார். நான் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இதுபோன்ற பந்து வீச்சை பார்த்தது இல்லை. அவுஸ்திரேலியாவின் ஜான்சன் இதுபோன்று பந்து வீசுவதை பார்த்திருக்கிறோம்.

ஆர்ச்சரின் திறமைக்கு வானம் தான் எல்லை என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்