அவுஸ்திரேலிய அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. ஆஷஸ் தொடரிலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் விலகல்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித் விலகி உள்ளார்.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-0 என்ற வெற்றி கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி முதல் 3 இன்னிங்ஸில் இரண்டு சதம் மற்றும் 92 எடுத்த ஸ்டீவ் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் தூணாக திகழ்ந்தார்.

பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் அவுஸ்திலேியா அணி வெற்றிப்பெற்றது, லண்டனில் நடந்த இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. ஆகத்து 22ம் திகதி லீட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான பயிற்சியில் அவுஸ்திரேலியா வீரர்கள் ஈடுபட்ட நிலையில் ஸ்மித் பயிற்சியில் பங்கேற்கவில்லை. லண்டனில் நடந்த இரண்டாவது போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சளார் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித் கழுத்தில் பலமாக தாக்கி அவர் மைதானத்திலே சரிந்தார் என்பது நினைவுக் கூரதக்கது.

பந்து தாக்கியதினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஸ்மித் பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், லீட்ஸில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஸ்மித் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்மித்துக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே அவுஸ்திரேலிய அணியில் இணைவார் என கூறப்படுகிறது. ஸ்மித் விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்