இந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பரிக்கா ஏ அணி, இந்திய ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. தென் ஆப்பரிக்கா ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி வீரர்களின் பட்டியலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு மும்பையில் அறிவித்தது.

ஆகத்து 29, ஆகத்து 31 மற்றும் செப்டம்பர் 2, 4 மற்றும் 8 ஆகிய திகதிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள தி ஸ்போர்ட்ஸ் ஹப்பில் போட்டிகள் நடைபெறும். முதல் 3 போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும் அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் அணித்தலைவராக செயல்படுகின்றனர்.

இதில், காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் பாதியில் இருந்து விலகிய தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூரும் அழைக்கப்பட்டுள்ளார். பாண்டே தலைமையிலான அணியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக தெரிவு செய்யப்பட்டார், அதே நேரத்தில் ஐயரின் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.

வளர்ந்து வரும் திறமையான வீரர்களான சுப்மான் கில், விஜய் சங்கர், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி பூய், ஷார்துல் தாக்கூர், அக்சர் படேல் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் பாண்டே மற்றும் ஐயரின் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளனர்.

மணீஷ் பாண்டே தலைமையில்முதல் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணி வீரர்களின் விவரம்: மணீஷ் பாண்டே (அணித்தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (அணித்தலைவர்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்