அவுஸ்திரேலியாவை பவுன்சரால் கதிகலங்க வைத்த ஆர்ச்சர்! அற்புதமாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்த டென்லி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ டென்லி காற்றில் பறந்து பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி, அங்கு ஆஷஸ் டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததாலும், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் தன்னுடைய அசுர வேகத்தால், அவுஸ்திரேலியா வீரர்களை மிரட்டியதை யாரும் அந்தளவிற்கு மறக்க முடியாது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி டிராவிற்காக போராடிக் கொண்டிருந்த போது , வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தை, அவுஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் லெக் திசையில் அடித்து ஆட, அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டென்லி அற்புதமாக பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார்.

இதைக் கண்ட இங்கிலாந்து வீரர்கள், அந்த கேட்சை நம்ப முடியாமல் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்