ரிக்கி பாண்டிங்கை ஊதி தள்ளி... சச்சின், ரோகித்தை சமன் செய்து..! வரலாறு படைத்தார் கிங் கோஹ்லி

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்தி தீவுகள் உடனான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியில் பட்டையை கிளப்பியதின் மூலம் அவுஸ்திரேலியா ஜம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் உடனான நேற்றைய கடைசி ஒரு நாள் போட்டியில் தனது 43வது சதத்தை விளாசிய கோஹ்லி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார் கோஹ்லி. கோஹ்லி கடந்த 10 ஆண்டுகளில் 20,018 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவரும், ஜம்பாவனுமான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.

ஜம்பவான் ரிக்கி பாண்டிங் 10 ஆண்டுகளில் 18,962 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை விராட் முறியடித்துள்ளார்.

இந்திய சார்பில் இதற்கு முன்பு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளில் 15.962 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதனையும் விராட் தகர்த்துள்ளார்.

மேலும் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட், ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை 97ஆவது முறையாக அடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டில் 11ஆவது முறையாக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக முறை 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ரோகித் சர்மாவுடன் விராட் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் சதம் அடித்த விராட் , ஜாம்பவான் சச்சினின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்தார். ஒருநாள் அரங்கில் ஒரே அணிக்கு எதிராக அதிகசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்