தனஞ்செய சுழல்... லக்மால் புயலில் சிக்கி சிதறிய துடுப்பாட்டகாரர்கள்: இலங்கையிடம் சுருண்டது நியூசிலாந்து

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூிலாந்து மோதின. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலி மைதானத்தில் தொடங்கியது. இதில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

முதல் நாள் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட நிலையில், ஆட்ட நேர முடியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஆகத்து 15 இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிக்கொடுத்த முதல் இன்னிங்ஸில் 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் ரொஸ் டெய்லர் 86 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும், அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். தற்போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்