டோனிக்கு 7, கோஹ்லிக்கு 18 ஏன்? ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான டோனி மற்றும் கோஹ்லி அணிந்திருக்கும் ஜெர்சிக்கு பின்னால் இருக்கும் எண்ணின் ரகசியம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தனக்கான எண்ணாக 18-ஐ தேர்வு செய்திருப்பார். இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து கோஹ்லி அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான்.

அவர் இறந்த திகதி 18 டிசம்பர் 2006 அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பவே என்னுடன் இருப்பதாக தோன்றும் என்று கூறியுள்ளார்.

அதே போன்று மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான டோனி தன்னுடைய ஜெர்சி எண்ணாக 7-ஐ தெரிவு செய்திருப்பார். இந்த எண்ணை டோனி தெரிவு செய்ததற்கு முக்கிய காரணம், அவருடைய பிறந்தநாள் தான்,டோனியின் பிறந்தநாள் 7 - 7 - 1981.

இதில் பிறந்த நாள் மற்றும் மாதம் இரண்டும் ஏழாம் எண்ணாகவே இருப்பதால் அதனை தன் ஜெர்சி எண்ணாக டோனி இணைத்து கொண்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்