உலககோப்பையில் டோனி காயத்தை மறைத்து விளையாடியது ஏன் தெரியுமா? வெளியான ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் டோனி தன்னுடைய கைவிரலில் ஏற்பட்ட காயத்தை மறைத்து விளையாடியதன் ரகசியம் என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் நடுவரின் தவறான முடிவுகள், டோனியின் கையில் ஏற்பட்ட காயத்தை ஏன் மறைத்தீர்கள் என பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனியின் கையில் விரல் முறிவு ஏற்பட்டது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், டோனி அந்த வலியுடனும் தான் தனது ஆட்டத்தை அவர் தொடர்ந்தார்.

போட்டியில் அந்த தடுமாற்றத்தையும் ரசிகர்கள் கண்டனர். நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் இது குறித்து கவலை அடைந்தனர். அதன் பின் தொலைக்காட்சியில் அந்த வீடியோவைக் கண்ட ரசிகர்கள், அந்த வீடியோவை டிரண்டாக்கினர்.

இந்நிலையில் அந்த காயம் குறித்து ரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், போட்டியின்போது டோனி காயமடைந்துள்ளார். அதாவது, விரலில் உள்ள முக்கியமான சிறு எலும்பு உடைந்துள்ளது.

இது டோனியை கடுமையாக பாதித்தது. அதனால் தான், கையை மடக்காமல் கூட உலக கோப்பை தொடர் முழுவதும் ஆடிக்கொண்டிருந்தார். வீரர்களுக்கு கை கொடுக்கும் போது கூட இடது கையை தான் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த காயத்தை டோனி சற்று ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அந்த காயம் பற்றி யாரும் பெரிதாக ஏதும் பேசி கொள்ள வேண்டாம் என்று நினைத்துள்ளார். போட்டிக்கு பின்னர், ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் அழைத்துள்ளனர்.

ஆனால் இந்திய அணி மருத்துவர்கள் குழுவின் அழைப்பை நிராகரித்தார். ஸ்கேன் வேண்டாம், நன்றாக இருக்கிறேன் என்று சமாளித்துள்ளார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு வேளை அந்த காயம் பெரிதாக இருந்து அடுத்த சில போட்டிகளில் ஆட முடியாமல் போய்விடும் என்றும் டோனி நினைத்துள்ளார்.

அதனை தாண்டி உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ராணுவத்தில் இணைய அப்போதே முடிவு செய்திருக்கிறார். காயம் இருந்தால் கண்டிப்பாக ராணுவத்தில் உடனடியாக சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதுவும் டோனிக்கு நன்றாக தெரியும்.

அதன் காரணமாக இதனை நினைவில் வைத்து, அந்த காயம் பற்றி யாருக்கும் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்