இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? தேர்வு பட்டியலில் 6 பேர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 6 பேரை ஆலோசனைக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரியின் பதவி காலம், கடந்த உலகக்கோப்பை போட்டியோடு முடிந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் என பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். புதிய பயிற்சியாளரை தெரிவு செய்ய முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தகுதி அடிப்படையில் 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை பயிற்சியாளர் குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட முன்னாள் வீரர் ராபின்சிங், இந்திய அணியின் முன்னாள் மேலளார் லால்சந்த் ராஜ்புத் ஆகிய 3 இந்தியர்களும்,

நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி (அவுஸ்திரேலியா), ஆப்கானிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய 3 வெளிநாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இந்த வார இறுதியில் கபில்தேவ் குழு நேர்காணல் நடத்துகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்