காலேவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை அணி வீரர்கள் தங்கள் பெயர் மற்றும் எண் கொண்ட சீருடையில் முதல் முறையாக விளையாட உள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
டெஸ்ட் போட்டி தொடர் வரும் 14ஆம் திகதி காலேயில் தொடங்க உள்ள நிலையில், அந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் முதல் முறையாக தங்களது பெயர்-எண் கொண்ட சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.
ஐ.சி.சி அறிவித்த இந்த புதிய நடைமுறையை பல அணிகள் ஏற்கனவே பின்பற்றி வரும் நிலையில், தற்போது இலங்கை அணியும் அதில் இணைந்துள்ளது.
Sri Lanka Cricket தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை வீரர்களான திமுத் கருணரத்னே, மேத்யூஸ், சண்டிமல், டிக்வெல்லா ஆகியோர் புதிய சீருடையுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது.
Sri Lanka will take the field for their first test match of the #SLvNZ tour in their new look Test whites, complete with names and numbers on the back! pic.twitter.com/pXSWISoOCN
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 13, 2019