இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் மூத்த வீரர்.. அதிருப்தியில் ரசிகர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடர்ந்து சொதப்பி வருவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ஆம் திகதி டிரினிடாட்டில் நடக்கிறது. முன்னதாக நடந்த முதல் போட்டி மழைக் காரணமாக ரத்தானது. பின்னர் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டி20 தொடரிலும் 1, 23, 3 ஓட்டங்கள் என அவர் மோசமாக ஆடினார்.

இவ்வாறு ஓட்டங்கள் எடுக்க தொடர்ந்து தடுமாறி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் தவானுக்கு அணியில் இடம் இல்லை.

எனவே, 3வது ஒருநாள் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். ஏற்கனவே இதேபோல் பலமுறை அவர் Form out ஆகி மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்