டோனி நிகழ்த்தப்போகும் அந்த காரியம்... மிகுந்த எதிர்பார்ப்பில் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள்: என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, வரும் 15-ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொடியேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இதை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் தான் பங்கேற்கவில்லை எனவும், எனக்கு இரண்டு மாதங்கள் ஓய்வு வேண்டும், நான் இராணுவத்தில் பணியாற்றவுள்ளதாக டோனி பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து தோனி தற்போஹு ஜம்மு, காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து ரோந்து பணிகளை மேற் கொண்டுள்ளார். அந்த பணிகள் முடிந்து ஆகஸ்ட் 15-ஆம் திகதியுடன் வீடு திரும்புகிறார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய யூனியன் பிரதேசமாக உருவாகவுள்ள லடாக்கில் தோனி, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட லடாக்கில் லே நகரில், வரும் 15-ஆம் திகதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் டோனி தேசிய கொடி ஏற்றுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், டோனி இந்திய ராணுவத்தின் சிறந்த அம்பாசிடர். அவர் இராணுவ வீரர்களை ஊக்குவிக்கிறார்.

தவிர, வீரர்களுடன் கால்பந்து, வாலிபல் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 15-ஆம் திகதி வரை டோனி ராணுவ வீரர்களுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக டோனி லடாக்கின் எந்த பகுதியில் கொடியேற்ற உள்ளார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனால் டோனி கொடி எங்கு கொடியேற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

டோனி தேசிய கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியில், லடாக் தொகுதி பாஜக எம்பி ஜம்யாங் செரிங்கும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்