மைதானத்தில் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்: வைரல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

கனடா டி20 லீக்கில் ஆடிவரும் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், சிக்ஸர்கள் அடித்து மைதானத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்தது வைரலாகி உள்ளது.

வான்கூவர் நைட்ஸ் அணித்தலைவராக செயல்பட்டுகிறார் மாலிக். இந்த லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணியும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியும் மோதின.

மழையால் இந்த போட்டி தாமதமாக தொடங்கப்பட்டதால் 16 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆடிய வான்கூவர் நைட்ஸ் அணி 16 ஓவரில் 170 ஓட்டங்களை குவித்தது.

16 ஓவரில் 171 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணி 13.4 ஓவரில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து வான்கூவர் நைட்ஸ் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மாலிக், சிக்ஸர் அடித்து இரண்டு கண்ணாடிகளை உடைத்தார். 26 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்த மாலிக், 3 சிக்ஸர்கள் விளாசினார். அதில் இரண்டு சிக்ஸர்கள் மைதானத்தில் இருந்த கண்ணாடிகளை பதம்பார்த்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்