சூப்பர்மேனாக மாறிய போலார்டு.. அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச்: அசத்தல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

கனடாவில் நடைபெற்ற வரும் குளோபல் டி20 கனடா தொடரில் வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் போலார்டு பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது.

ஜி20 கனடா தொடரில் நேற்று நடந்த நாக் அவுட் போட்டியில் டொராண்டோ நேஷனல்ஸ், வின்னிபெக் அணிகள் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற ஹாக்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி களமிறங்கிய டொராண்டோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது. டொராண்டோ வீரர் Klaasen இறுதி வரை ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்கள் குவித்தார்.

238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாக்ஸ் அணி 17.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது. இதன் போது மழைகுறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி ஹாக்ஸ் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஹாக்ஸ் இன்னிங்ஸின் போது டொராண்டோ சுழற்பந்து வீச்சாளர் கிரீன் வீசிய பந்தை, ஹாக்ஸ் அணியில் விளையாடி அதிரடி அவுஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் நேராக பறக்க விட்டார்.

எனினும், எல்லை கோட்டிற்கு அருகே தடுப்பில் ஈடுபட்டிருந்த டொராண்டோ அணியில் விளையாடி மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் போலார்டு பறந்து அந்தரத்தில் கேட்ச் பிடித்து அசத்தினார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்