வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசால் பெரேரா அதிரடி சதம் விளாசினார்.
கொழும்பில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
தொடக்க வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோ 7 ஓட்டங்களும், திமுத் கருணரத்னே 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் குசால் பெரேரா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதிரடியில் மிரட்டிய குசால் பெரேரா 82 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஒரு சிக்சர், 17 பவுண்டரிகள் அடங்கும். இது அவருக்கு 5வது சர்வதேச சதம் ஆகும்.