வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை வீரர் அவுட்!

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் இளம் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பில் தொடங்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையின் அணியின் தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி, திமுத் கருணரத்னே மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். உலகக்கோப்பை சதம் விளாசிய பெர்னாண்டோ இந்தப் போட்டியில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டியின் 3வது ஓவரில் ஷாபிஃல் பந்துவீச்சில் சவுமியா சர்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்