தடுமாறும் இங்கிலாந்து அணி.. மிரட்டும் அயர்லாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

லண்டனில் நடந்து வரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி லண்டனில் 24ஆம் திகதி தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

டென்லி(23) சாம் குர்ரன்(18) மற்றும் ஸ்டோன்(19) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 85 ஓட்டங்களுக்கு சுருண்டது. அயர்லாந்து தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய டிம் முர்தாக் 5 விக்கெட்டுகளும், மார்க் அடைர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 58.2 ஒவரில் 207 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ பால்பிரினி 55 ஓட்டங்களும், பவுல் ஸ்டெர்லிங் 36 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டோன், சாம் குர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Reuters

Getty

AFP

அதனைத் தொடர்ந்து, 122 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. பர்ன்ஸ் 6 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஜேக் லீச் மற்றும் ஜேசன் ராய் இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 78 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின்னர், ஜேக் லீச் 92 ஓட்டங்களில் முர்தாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து டென்லி, பேர்ஸ்டோவ், மொயீன் அலி, வோக்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

கேப்டன் ரூட் 31 ஓட்டங்கள் எடுத்தார். இளம் வீரர் சாம் குர்ரன் அதிரடியாக 29 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார். நேற்றைய நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அத்துடன் அந்த அணி 181 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டுகளும், ராங்கின் மற்றும் தாம்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணி விரைவிலேயே கடைசி விக்கெட்டை இழந்தால், அயர்லாந்து அணிக்கு எளிதான இலக்கு நிர்ணயிக்கப்படும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்