அணிக்கு தேர்வு செய்யாத பிசிசிஐ.. இளம் வீரர் எடுத்த முடிவு!

Report Print Kabilan in கிரிக்கெட்
261Shares

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்படாத ஷுப்மான் கில், இனி தனது நோக்கம் தேர்வுக்குழுவை ஈர்ப்பது தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் ஷுப்மான் கில் தேர்வு செய்யப்படவில்லை.

இவர் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடி, 3 போட்டிகளில் 218 ஓட்டங்கள் குவித்தார். இதனால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மனீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் ஷுப்மன் கில் அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து ஒரு முடிவெடுத்துள்ளார்.

AFP

அவர் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய சீனியர் அணி அறிவிப்புக்காக காத்திருந்தேன். ஏதாவது ஒரு அணியிலாவது என்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. ஆனால், இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு இந்திய அணிக்கான தேர்வுக்குழுவை என் பக்கம் ஈர்ப்பேன்.

இதுதான் இனி எனது முக்கியமான குறிக்கோள். வெஸ்ட் இண்டீஸ் தொடர் எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. நல்ல பந்துகளை தடுத்து விளையாடி, கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தை எனக்கு இந்த தொடர் கற்றுக் கொடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்