வங்கதேசத்தை எதிர்கொள்ள தீவிர பயிற்சியில் இறங்கிய மலிங்கா! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிராக நாளை தொடங்க உள்ள ஒருநாள் தொடருக்காக, இலங்கை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடரில் பெரிய அணிகளையே மிரட்டிய வங்கதேசம், தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில், கொழும்பில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணி நிர்ணயித்த 283 ஓட்டங்கள் இலக்கை, வங்கதேச அணி 48.1 ஓவரிலேயே விரட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிரட்டியது.

எனவே, அந்த அணியை சமாளிக்க இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இலங்கை கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, வலைப்பயிற்சியில் ஆக்ரோஷமாக பந்துவீசுகிறார்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்களில் முரளிதரன், சமிந்தா வாஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக மலிங்கா (335) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்