டோனியின் 7ஆம் எண் ஜெர்சி யாருக்கு.. சிறப்பு செய்யுமா பிசிசிஐ?

Report Print Abisha in கிரிக்கெட்
161Shares

டோனி பயன்படுத்திய 7ஆம் எண் ஜெர்சி மாற்று வீரருக்கு வழங்கபடுமா அல்லது, சச்சினுக்கு சிறப்ப செய்தது போன்று டோனிக்கும் பிசிசிஐ சிறப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது ஐசிசி. இதற்கு முன், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயரோ அல்லது எண்ணோ இடம் பெறாது. முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள்.

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது ஜெர்சியில் அவர்களது பெயர் மற்றும் எண் இடம் பெற உள்ளது.

இந்திய அணி மேற்க்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20, 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் செப்டம்பர் 3-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

கோலி மற்றும் பல வீரர்கள் தங்களது ஒரு நாள் ஜெர்ஸி எண்ணான பழைய எண்களையே பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டெஸ்ட் தொடர்களில் இருந்து டோனி ஓய்வு பெற்றுள்ளநிலையில் அவருடைய ஜெர்சியை எண்ணை யார் பயன்படுத்த போகிறார்கள் எனற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக 7 என்ற எண்ணை கொண்ட ஜெர்சியை யாரும் பயன்படுத்தப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்தாக சச்சினின் ஜெர்சியும் அவருக்கு மரியதை அளிக்கு விதத்தில் யாருக்கு வழங்கபடாமல், சிறப்பு செய்தது பிசிசிஐ அந்த வகையில் டோனிக்கும் சிறப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்