இது அவுட்டா? இல்லையா? சச்சின் டெண்டுல்கரை குழப்பிய வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ரசிகர்களிடம் பதில் கேட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில், துடுப்பாட்ட வீரர் ஒருவர் தனக்கு வீசப்படும் பந்தை எதிர்கொள்கிறார். அவர் பந்தை அடிக்க முடியாமல் திணற, ஸ்டம்பை தாக்கி விட்டு சென்றது.

ஆனால், ஸ்டம்புகளின் மீது இருந்த பெய்ல்களில் ஒன்று மட்டும், ஒற்றை ஸ்டம்பின் மீது நகர்ந்து நின்றது. எனினும் கீழே விழவில்லை. பந்து வீச்சாளர் உட்பட பீல்டர்கள் பலரும் நடுவரிடம் அவுட் கேட்டனர்.

நடுவருக்கு குழப்பம் இருந்தபோதும் அவுட் கொடுக்கவில்லை. இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கரின் நண்பர் அவருக்கு அனுப்பியுள்ளார். சச்சினும் இந்த வீடியோப் பார்த்து குழப்பமடைந்துள்ளார்.

உடனே அவரும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘என்னுடைய நண்பர் இந்த வீடியோவை எனக்கு ஷேர் செய்தார். இதுபோன்ற விடயம் நடப்பது வழக்கத்திற்கு மாறானது. நீங்கள் நடுவராக இருந்தால், என்ன முடிவு எடுப்பீர்கள்?’ என்ற கேள்வியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்