நான் எதிர்பார்க்கவில்லை.. கோஹ்லி அப்போதே அப்படித்தான் இருந்தார்! இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பிரபல பயிற்சியாளர் டேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவ் வாட்மோர். இவர் தனது ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வங்கதேசம், பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டார். தற்போது கேரள அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை வெகுவாக புகழ்ந்துள்ளார் டேவ் வாட்மோர். கோஹ்லி குறித்து அவர் கூறுகையில், ‘மற்றவர்களை காட்டிலும் கோஹ்லி ஒரு அற்புதமான வீரர். மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது மைதானத்தில் மிகவும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தும் நபர்.

அவர் 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்த போதே அப்படித்தான் இருந்தார். தமது தலைமையிலான அணிக்கு தானே முன் மாதிரியாக இருந்து வழிநடத்துபவர். விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் விளையாடுபவர்.

பயிற்சியின்போது கூட 100 சதவிதம் உழைப்பை கொட்டும் ஒரே வீரர். அவர் முதல் தரப்போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது கூட உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அனைத்தையும் கோஹ்லி தன் முயற்சியால் மாற்றியிருக்கிறார்.

அவர் எப்போது உடல்தகுதி தான் முக்கியம் என முடிவெடுத்தாரோ, அன்றில் இருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது. அவரின் இந்த முடிவே அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை’ என தெரிவித்துள்ளார்.

Phil Walter/Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்