இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி விலகுவாரா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை.

அரையிறுதிக்கு கூட இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் தகுதி பெறவில்லை.

இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, விளையாட்டுதுறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட ஏனைய பயிற்சியாளர்கள் குழுவை அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்