லசித் மலிங்காவை தொடர்ந்து மற்றொரு இலங்கை ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு! சோகத்தில் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார்.

21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களும், 58 டி20 போட்டிகளில் 66 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இதோடு ஒருநாள் போட்டிகளில் 4 அரைச்சதத்துடன் 1327 ரன்களை எடுத்துள்ளார்.

கடைசியாக குலசேகரா 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஒரேயொரு இலங்கை வீரர் குலசேகரா தான்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் இலங்கை அணியின் மலிங்கா தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் குலசேகராவின் ஓய்வு முடிவு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று கொழும்பு தாஜ் சமுத்தரா ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா, நுவான் குலசேகர தனக்கு பிரியாவிடைப் போட்டியொன்றில் விளையாட வேண்டி எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்