உலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்? இதான் காரணம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக, விலகிய போது மாற்று வீரர்களாக ரிஷாப் பந்த், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இதனால் வெறுப்பான ராயுடு, அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின், இந்திய தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

பிரசாத் கூறியதாவது, ராயுடு அப்போது வெளியிட்ட அந்த ட்வீட்-டை ரசித்தேன். அருமையான ட்வீட். ஆனால், பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது.

அவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டோம் என்று சொல்வது சரியானதல்ல. அணியில் இடம் கிடைக் காததால், அவர் எந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பார் என்பது தெரியும். அதே அளிவிற்கு தான் தோர்வுக் குழுவும் வருத்தப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அதற்காக நானும் வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறியதும் இடது கை துடுப்பாட்டகாரர் தேவை என்பதால் ரிஷாப் தேர்வு செய்யப்பட்டார் என கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers