இனி வீரருக்கு அடிபட்டால் மாற்று வீரர் துடுப்பாட்டம், பந்து வீசலாம்! ஐசிசி அனுமதி

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட்டில் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்கு, களத்தில் இறங்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீசலாம் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இதுவரை ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச முடியும் என்ற நடைமுறை கிரிக்கெட்டில் இருந்தது. வீரர் ஒருவருக்கு களத்தில் காயம் ஏற்பட்டால், அவர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறுவார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணி களமிறக்கிக் கொள்ளலாம். ஆனால் அவர் பந்து வீசவோ, துடுப்பாட்டம் செய்யவோ கூடாது என்பது ஐ.சி.சியின் விதி ஆகும்.

ஆனால் இந்த நடைமுறை காயமடைந்த வீரரின் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இக்கட்டான நேரத்தில் காயமடைந்த வீரரின் துடுப்பாட்டம், பந்துவீச்சு இல்லாமல் போவது அணிக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும்.

எனவே, தலையில் அடிபட்டு பயங்கர அதிர்ச்சியுடன் துடுப்பாட்டம் செய்ய முடியாத நிலை, ஆடும் லெவனில் உள்ள வீரருக்கு ஏற்பட்டால் மாற்று வீரராக களமிறங்கும் வீரருக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனை ஐ.சி.சி நீண்ட நாட்களாக பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில், மாற்று வீரராக களமிறங்கும் வீரர் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச ஐ.சி.சி அனுமதி அளித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்