ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை! ஐசிசியின் அதிரடி நடவடிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலையீடு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.

அத்துடன் கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியையும் தெரிவு செய்திருந்தது. இதுதொடர்பாக லண்டனில் நடந்த ஐ.சி.சியின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற முடிவினால், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி இடைக்கால தடை விதித்தது. இதனால், ஜிம்பாப்வே நாட்டுக்கு ஐ.சி.சியால் வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தி வைக்கப்படும்.

இதுகுறித்து ஐ.சி.சியின் தலைவர் ஷஷாங் மனோகர் கூறுகையில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடப்பது எந்த வகையிலும் ஐ.சி.சியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஐ.சி.சி விதிமுறைகளை மீறிய செயல்கள் அங்கு நடக்கின்றன. அதனால் இந்த இடைக்கால தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்த தடை காரணமாக, ஐ.சி.சி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers