உலகக்கோப்பை தொடரில் மிரட்டிய வீரர்.. முதல் முறையாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய், இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் முதன் முறையாக இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் அவர் 443 ஓட்டங்கள் குவித்தார்.

இதுவரை 84 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜேசன் ராய்க்கு, டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு ராய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஜேசன் ராய் விளையாடுகிறார்.

28 வயதாகும் ஜேசன் ராய், 2014ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும், 2015ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers