U19 உள்ளூர் போட்டியில் 150 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுகுட்பட்டோருக்கான உள்ளூர் ஒருநாள் போட்டியில், இளம் வீரர் கமில் மிஷார 152 ஓட்டங்கள் விளாசினார்.

U19 Super Provincial ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் தொடரான இதில் கொழும்பு மற்றும் கண்டி அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

முதலில் துடுப்பாட்டம் செய்த கொழும்பு அணியில் தொடக்க வீரரும், கேப்டனுமான கமில் மிஷார அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கும் வகையில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை.

விக்ரமசிங்கே 30 ஓட்டங்களும், விஜிசிங்கே 29 ஓட்டங்கள் எடுத்தனர். எனினும், தனியாளாய் நங்கூரம் போல் நின்று விளையாடிய கமில் மிஷார சதம் விளாசினார்.

சதத்திற்கு பின்னரும் அதிரடி காட்டிய அவர், 161 பந்துகளில் 152 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 269 ஓட்டங்கள் எடுத்தது.

கண்டி அணி தரப்பில் சஞ்சயா 4 விக்கெட்டுகளும், நதீஷன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கண்டி அணி களமிறங்கியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers