ஓய்வு பெறுவதற்கு முன்னர் டோனி செய்ய துடிக்கும் ஒரு முக்கிய விடயம்... என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறுவதற்கு முன்னால் ரிஷப் பண்ட்டை முழுமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எப்போது ஓய்வு பெறப்போகிறார் என பிசிசிஐ பேசவுள்ளது.

இதனிடையில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நாளை மறுநாள் அற்விக்கப்படவுள்ளது.

இதில் டோனியின் பெயர் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் பரவி வருகின்றன.

இப்படி டோனியை ஓரங்கட்டும் செயல் நடக்கத் தொடங்கி உள்ள நிலையில், அவர் இந்திய அணியின் எதிர்கால கீப்பர் ரிஷப் பண்ட்டை மெருகேற்றும் வேலையில் இறங்கியுள்ளார்.

2020-ல் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ளது. அதற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ளதால், அதற்கு முன் தன்னை போல இந்திய அணிக்கு முழுத் திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை மாற்றுவதற்கான வேலையில் டோனி ஈடுபடுவார் என தெரிகிறது.

இதையடுத்து ரிஷப் பண்ட்டை முழுமையான வீரராக தயார் செய்யும் பணியை டோனி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers