எனக்கு ஓவர் த்ரோ பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.. நடுவரைத் தான் நம்பினேன்! கேன் வில்லியம்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடந்த ஓவர் த்ரோ குறித்து தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டி ‘டை’இல் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் முறையும் ‘டை’ ஆனதால், பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரு ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, போல்ட் வீசிய 4வது பந்தில் ஓவர் த்ரோவில் 6 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது.

இதுவே நியூசிலாந்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த ஓவர் த்ரோ குறித்து வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இதுகுறித்து பேசியுள்ளார்.

AFP

அவர் கூறுகையில், ‘எனக்கு ஓவர் த்ரோ பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதே சமயம் நடுவரின் செயல்களை நாம் நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்கள் அந்த இடத்தில் விதிகளை பின்பற்றதான் இருக்கிறார்கள்.

அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. சில சமயங்களில் தவறாகி விடுகிறது. மேலும் அந்த விதி விளையாட்டில் உள்ள ஒரு இயல்பான விதி. இவ்வளவு கவனம் கொள்வது தேவை இல்லாதது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers