உலகக்கோப்பையின் முடிவையே மாற்றிய ஓவர் த்ரோ! மௌனம் கலைத்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய ஓவர் த்ரோ ரன்கள் குறித்து ஐ.சி.சி கருத்து தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஓவர் த்ரோ மூலம் கிடைத்த 6 ஓட்டங்கள் தான்.

நியூசிலாந்து நிர்ணயித்த 242 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4வது பந்தை ஸ்டோக்ஸ் விளாசிவிட்டு, இரண்டாவது ரன் எடுக்க முயன்றார். அப்போது பீல்டிங்கில் இருந்த கப்தில் கீப்பரிடம் பந்தை வீசியபோது, அது ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

எனவே, ஓடி எடுத்த இரண்டு ஓட்டங்களுடன், ஓவர் த்ரோ மூலமாக இங்கிலாந்துக்கு கூடுதலாக 4 ஓட்டங்கள் என மொத்தம் 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதுவே ஆட்டத்தின் முடிவை மாற்றியமைத்தது. 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது தவறு என விமர்சனங்கள் பல எழுந்த நிலையில், 5 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவர் த்ரோவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பிரபல முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டபிள் கூறியிருந்தார்.

AFP

ஐ.சி.சியின் விதிப்படி, பீல்டர் பந்தை எறிவதற்கு முன்பாக துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடந்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய தினம் அவ்வாறு வீரர்கள் கடக்கவில்லை. அதனால், ஒரு ரன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மௌனம் ஐ.சி.சி கலைத்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘விதிகளை களத்தின் சூழலுக்கு ஏற்ப நடுவர்கள் முடிவு எடுக்கிறார்கள். அதனால், அந்த முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது என்பதே எங்களின் கொள்கை முடிவு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...