சோகத்தை மறைத்து சாதனை..! உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து ஹீரோ ஆர்ச்சருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து ஹீரோ ஜோப்ரா ஆர்ச்சர், உலகக் கோப்பை தொடரின் போது நெருங்கிய உறவினர் மரணத்தால் துக்கப்பட்டு வருந்தி உள்ளார்.

மே மாதம் தென்னாப்பிரிக்காவை வென்றதன் மூலம், இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு தொடங்கியது. இப்போட்டிக்கு மறுநாளே, ஜோப்ரா ஆர்ச்சரின் உறவினர் அசாந்தியோ பிளாக்மேன், 24, செயின்ட் பிலிப்பில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் செய்தி இருந்தபோதிலும், பார்படோஸில் பிறந்த ஆர்ச்சர் உலகக் கோப்பையின் போது 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் முன்னணி விக்கெட் எடுத்த வீரராக திகழ்ந்தார்.

ஆர்ச்சரின் தந்தை கூறியதாவது: மறைந்த உறவினருக்கு ஜோப்ராவின் அதே வயது, அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தனர், அவர் இறப்பதற்கு முந்தைய நாட்களில் கூட ஜோப்ரா அவருக்கு மேசேஜ் அனுப்பினார். அசாந்தியோ மரணத்தால் ஜோப்ரா உண்மையில் பாதிக்கப்பட்டார், ஆனால், விளையாட்டை தொடர வேண்டியிருந்தது.

மக்கள் அவருடைய பிரிட்டிஷ் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் அவர் இங்கிலாந்துக்காக விளையாடுவது அனைவரையும் கிரிக்கெட் விளையாட ஊக்குவிப்பதாகக் காட்டியுள்ளது, ஏனெனில் இது பொதுவாக ஒரு உயர்ந்தோருக்குரிய விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது என்று அவரது தந்தை கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்