இங்கிலாந்து அணியின் கடைசி நிமிடம்... தமிழக வீரர் அஸ்வினின் வைரல வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை போட்டியின் பரபரப்பான இறுதி நிமிடத்தை இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் சக வீரர்கள் எப்படி பார்த்து கொண்டாடினர் என்பது தொடர்பான வீடியோவை தமிழக வீரர் அஸ்வின் அதை வீடியோவாக எடுத்துள்ளார்.

உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை பட்டத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதனால் இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த இந்த பரபரப்பான இறுதி கட்டத்தின் போது, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஒவ்வொரு பந்திற்கும் தலையில் கையை வைப்பது, எப்படியாவது இங்கிலாந்து ஜெயிக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டது, வெற்றி உறுதியானதும், துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை அங்கிருந்த தமிழக வீரர் அஸ்வின் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது அது வைரலாகி வருகிறது.

அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி அணியில் விளையாட சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers