டோனி ரன் அவுட்..! கப்டிலை பழிதீர்த்த பட்லர்; தல ரசிகர்கள் கொண்டாட்டம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கப்டில் ரன் அவுட் ஆனதை டோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

பரபரப்பாக சென்ற சூப்பர் ஓவரின் இறுதியில் நியூசிலாந்து துடுப்பாட்டகாரர் கப்டிலை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் ரன் அவுட் செய்து அசத்தினார். சூப்பர் ஓவரிலும் இரு அணிகளின் ஓட்டங்கள் சமன் ஆனதால், இறுதியில் இங்கிலாந்து 3 பவுண்டரிகள் அடித்திருந்ததால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டியில் கப்டில், டோனியை ரன் அவுட் செய்து போட்டியின் முடிவை மாற்றினார். தற்போது, பட்லர், கப்டிலை ரன் அவுட் செய்ததை டோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டோனிக்காக, பட்லர் கப்டிலை பழிதீர்த்து விட்டதாக சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கருத்து தெரித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers