உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் டோனியை ரன் அவுட் செய்ததைப் பற்றி கபதில் முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் வெற்றிக்கு அருகில் சென்ற இந்திய அணியை, கப்தில் தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் டோனியை ரன் அவுட் செய்தத்தால், இந்தியாவின் உலகக்கோப்பை கனவு அப்படியே தகர்ந்து போனது.
Hasta la vista, Dhoni 🎯 #CWC19 pic.twitter.com/TWxbKULjCQ
— ICC (@ICC) July 10, 2019
அதில், அந்தப் பந்து என்னை நோக்கி வரும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் முடிந்தளவிற்கு அந்த பந்தை சீக்கிரம் பிடிக்க வேண்டும் என்பதில் மற்றும் கவனமாக இருந்தேன்.
பந்தைப் பிடித்து த்ரோ செய்யும்போது அது எப்படியும் நேராக வேறு எங்காவது செல்லும் என்று தான் நினைத்தேன்.
நல்லவேளையாக அது டிரைக்ட் ஹிட் அடித்து அவுட்டாக மாறிவிட்டது. டோனி அவுட் ஆனது எங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இந்தியாவின் தலைவிதியை அந்த ரன் அவுட் மாற்றியது என கூறியுள்ளார்.