டோனியின் ரன்-அவுட் எங்களுக்கு அதிர்ஷ்டம்! நியூசிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் டோனி ரன்-அவுட் ஆனது தங்கள் அணியின் அதிர்ஷ்டம் என நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி, கடந்த 9ஆம் திகதி மான்செஸ்ரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் டோனி-ஜடேஜா கூட்டணி வெற்றிக்காக போராடியது. ஜடேஜா அவுட் ஆனதைத் தொடர்ந்து, முக்கிய கட்டத்தில் டோனியை ரன்-அவுட் செய்தார் நியூசிலாந்து வீரர் கப்தில். இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், டோனியின் ரன்-அவுட் தான் ரசிகர்களை வெகுவாக பாதித்தது. அதனைத் தொடர்ந்து டோனிக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் போட்டி குறித்து கூறுகையில், ‘டோனிக்குப் போடப்பட்ட பந்து என் கையில் வரும் என நினைக்கவில்லை. என்னை நோக்கி வருவதை கண்டு அதனை பிடிக்க தயாராக இருந்தேன்.

பந்து கைக்கு வந்தவுடன் ஸ்டெம்பை நோக்கி வேகமாக வீசினேன். எங்கள் நேரம். அது நேராக ஸ்டெம்பில் பட்டுவிட்டது. இதனால் டோனி ரன்-அவுட் ஆனது எங்கள் அணிக்கு மிகச்சிறந்த அதிர்ஷ்டம் தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers