இந்தியா அனுபவித்த அதே கஷ்டத்தை அனுபவிக்கும் அவுஸ்திரேலியா... கவலையில் மூழ்கிய ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 223 ஓட்டங்களே எடுத்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

பிர்மிங்காமில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

சொந்த மண் என்பதால், இங்கிலாந்து அணி மிரட்டலாம் என்று கணிக்கப்பட்டது.

அதன் படியே அவுஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் முதல் பந்திலே வெளியேற, அடுத்து வார்னர் 9 ஓட்டங்களில் வெளியேற, அடுத்தடுத்து சீட்டுக் கட்டு போல் அவுஸ்திரேலியா வீரர்கள் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடித்து 85 ஓட்டங்களில் வெளியேற, அவுஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் அடில் ரசித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின் ஆடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 8 ஓவர் முடிவில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

நேற்று இந்திய அணிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலையில் தான் தற்போது அவுஸ்திரேலியாவும் இருக்கிறது என்று அந்நாட்டு ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் கவலையை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்