நியூசிலாந்துடன் அரையிறுதியில் தோல்வி... அதன் பின் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் உடற்பயிற்சி நிபுணருக்கு கோஹ்லி தன்னுடைய உருக்கமான நன்றியை தெரிவித்துள்ளார்.

உலககோப்பையை இந்த முறை நிச்சயம் வெல்லும், பலம் வாய்ந்த அணி என்று முன்னணி வீரர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் அடித்து கூறி வந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி துரதரிஷ்டவசமாக தோல்வியை சந்தித்தது.

இது தான் டோனிக்கு கடைசி உலகக்கோப்பை என்பதால், அவருக்கு கோப்பையை வாங்கித தர முடியவில்லை என்று அவரது ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் உடற்பயிற்சி நிபுணரான பாட்ரிக் பார்ஹர்ட், நேற்று தன்னுடையட் டுவிட்டர் பக்கத்தில், இன்றைய நாள் தான் இந்திய அணியுடன் நான் இருக்கும் கடைசி நாள், கடந்த 4 வருடங்கள் இந்திய அணியுடன் பயணிக்க வாய்ப்பு கொடுத்த பிசிசிஐக்கு நன்றி, இந்திய வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

இதைக் கண்ட இந்திய வீரர் கோஹ்லி, பாட்ரிக்கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாட்ரிக் மற்றும் பாசு நீங்கள் இருவரும் செய்த அற்புதமான பணிக்கு என்னுடைய நன்றி, உங்களின் நட்பு சிறப்பு வாய்ந்தது. நீங்கள் ஒரு ஜெண்டில் மேன், உங்கள் வாழ்க்கையில் எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...