டோனி சச்சினுக்கு கொடுத்த பரிசை, கோஹ்லி டோனிக்கு தரவில்லையே! கண்ணீர் விடும் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

2011ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சச்சினுக்கு பிரியாவிடை கொடுத்த டோனிக்கு, தற்போது அது கிடைக்காதது குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இது இந்திய அணியின் ஜாம்வானான டோனிக்கு கடைசி உலகக் கோப்பையாக அமைந்தது. எனவே இந்த உலகக் கோப்பையை வென்று டோனிக்கு நல்ல பிரியாவிடையளிக்க வேண்டும் என்ற கனவும் தகர்ந்துள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். அது சச்சின் டெண்டுல்கருக்கு 6ஆவது உலகக் கோப்பை தொடராகும்.

கிரிக்கெட் உலகில் பல தரப்பட்ட சாதனைகளை படைத்திருந்தாலும் உலகக் கோப்பையை தன் கையில் பிடிக்கும் கனவு சச்சினுக்கு அப்போது வரை எட்ட முடியாத கனவாகவே இருந்தது.

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை சச்சினின் கடைசி உலகக் கோப்பை என்பதால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் "சச்சினுக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வோம்" என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

அதற்கேற்றார் போல் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.

அப்போது பேசிய கோஹ்லி, "இந்திய அணியை தன் தோள்களில் பல ஆண்டுகளாக சுமந்தவர் சச்சின். இப்போது அவருக்கு உலகக் கோப்பையை பரிசளித்து, நாங்கள் அவரை தோளில் சுமக்கிறோம் என்றார்.

அதேபோல நடப்பு உலகக் கோப்பை தொடர் டோனியின் கடைசி உலகக் கோப்பை தொடராக அமைந்தது. எனவே கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரை வெற்றிப் பெற்று டோனிக்கு உலகக் கோப்பையை பரிசாக அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோஹ்லி தன்னுடைய கேப்டனுக்கு நல்ல பிரியாவிடை அளிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இது இந்திய அணி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...