டோனியை ஏன் விமர்சிக்கிறீங்க? அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? திடீரென வைரலாகும் சூப்பர் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், டோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்ற தருணத்தின் வீடியோ திடீரென வைரலாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து.

இப்போட்டியில் டோனி அணியை வெற்றி பெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கியமான தருணத்தில் ரன் அவுட்டாகி இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக நொறுக்கினார்.

இந்நிலையில் டோனி முக்கிய தருணத்தில் அவுட்டாகாமல் ஆடியிருக்க வேண்டும் ஒரு ஒரு சாரார் அவரை விமர்சித்துள்ளனர்.

அதே நேரத்தில், இது போன்ற டென்ஷனான தருணத்தில் டோனி சிறப்பாக விளையாடுபவர் தான், அதற்கு எடுத்துகாட்டு 2011 உலக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் சிக்சர் அடித்து டோனி இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தார் என இன்னொரு சாரார் அவர் விளாசிய சிக்சர் வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

டுவிட்டர், பேஸ்புக் என எங்கு பார்த்தாலும் இந்த வீடியோவை தற்போது காண முடிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...