டோனி மனசு வைத்தால் போதும்..! நியூசிலாந்து அணியில் விளையாடலாம்: வலைவிரித்த வில்லியம்சன்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீரர் டோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லயம்சன் சிறப்பான பதில் அளித்துள்ளார்.

அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லயம்சன் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, நீங்கள் அணித்தலைவராக இருந்திருந்தால், டோனியை உங்கள் விளையாடும் XI அணியில் எடுத்து இருப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வில்லியம்சன், டோனி உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். நான் இந்திய அணியின் தலைவராக இருந்தால் கண்டிப்பாக அவரை தேர்வு செய்வேன். இந்த கட்டத்தில், நேரத்தில் அவரின் அனுபவம் மிகவும் முக்கியமானது. நேற்றும், இன்றும் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.

ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து டோனி விளையாடியது மிக மிக மதிப்பு வாய்ந்தது. நெருக்கடியான நிலையில் களமிறங்கி ஜடேஜா அடித்து துடுப்பாடியதை போல், இரு அணி வீரர்களில் யாராலும் விளையாட முடியாது.

டோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். நியூசிலாந்து அணியில் விளையாட டோனி தகுதியற்றவர் என கூறி அரங்கில் சிரிப்பலையை ஏறபடுத்திய வில்லியம்சன், டோனி நாடு மாற விரும்புகிறாரா? என கேள்வி எழுப்பினார். ஏனென்றால், நியூசிலாந்து அணியில் அவரை தேர்வு செய்வது குறித்து, நாங்கள் கருத்தில் கொண்டு பரிசீலிப்போம் என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...