டோனியின் ரன் அவுட்டால் வெடித்த பெரிய சர்ச்சை... நடுவர்களின் அஜாக்கிரதையை புட்டு வைத்த ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
2017Shares

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் ரன் அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் இனி மறக்க முடியாது.

ஏனெனில் முதலில் தோல்வியின் விழும்பில் இருந்த இந்திய அணியை மீட்டு, வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து டோனி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆகினார்.

இந்நிலையில் அந்த ரன் அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது டோனி ரன் அவுட் ஆன ஓவரில், நியுசிலாந்து பீல்டர்ஸ் 5 பேருக்கு பதிலாக 6 பேர் அவுட் சைடு இருந்துள்ளனர். இதை நடுவர் கவனிக்காமல் இருந்துள்ளார்.

அப்படி நடுவர் மட்டும் கவனித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்