மைதானத்திலிருந்து கண்ணீரோடு வெளியேறிய டோனி? வெளியான வீடியோவால் ரசிகர்கள் வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்
1849Shares

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் டோனி அவுட்டாகி வெளியேறிய போது, கண்கலங்கிய நிலையில் வெளியேறிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற, அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், அந்த போட்டி எதிலிருந்து முடிந்ததோ, அதிலிருந்து இன்று துவங்கியது.

அதன் ஆடிய நியூசிலாந்து அணி 239 ஓட்டங்கள் குவிக்க, இந்த குறைந்த ஓட்டங்களைக் கூட எட்ட முடியாமல் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததே டோனியின் ரன் அவுட் தான், அவரை கப்டில் தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் அவுட் செய்திருப்பார்.

இந்நிலையில் டோனி அவுட்டானவுடம், மைதானத்தை விட்டு வெளியேறும் போது பல்லை கடித்துக் கொண்டு, ஒரு மாதிரி பெரு மூச்சு விட்டு கண்கலங்கிய படி வெளியேறியுள்ளார்.

இதை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்