இப்போ தெரியும் டோனியின் அருமை... பேசியவர்களின் வாய்க்கு பூட்டு போட்ட யுவராஜ் சிங்

Report Print Santhan in கிரிக்கெட்
947Shares

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி திணறி வரும் நிலையில் யுவராஜ்சிங் டோனிக்கு ஆதரவாக் டுவிட் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ஓட்டங்களை எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியின் விழும்பில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நெருக்கடி தருணத்தில் மிடில் ஆர்டர் சிங்கிள்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு நாம் தடுமாறி வருகிறோம். இங்குதான் அனுபவம் முக்கியமான பங்காற்றும். டோனி நம்மை இறுதிக்குள் இட்டுச் செல்வார் என்று நம்புவோம், டோனியின் அருமை தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக டோனி ரன் அவுட்டாக, இந்திய வெற்றியின் அருகே சென்று தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்