இந்திய அணி சேஸிங் செய்ய திணறும்.. முன்பே கணித்த நியூசிலாந்து அதிரடி வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 250 ஓட்டங்கள் என இலக்கு நிர்ணயித்தாலும் இந்திய அணி சேஸிங் செய்ய திணறும் என்று, முன்னாள் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் கூறியது போல் தற்போது இந்தியா தடுமாறி வருகிறது.

மான்செஸ்டரில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, இந்திய அணி 240 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா, கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி ஓட்டங்கள் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. பாண்ட் மற்றும் சிறிது நேரம் தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

முன்னதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம், தனது ட்விட்டர் பக்கத்தில் நியூசிலாந்து அணி 250 ஒட்டங்கள் இலக்கு நிர்ணயித்தால் கூட இந்திய அணி திணறும் என்று தெரிவித்தார்.

அவர் கணித்தது போலவே தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை 10 ஓவர்களிலேயே இழந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்